தேசிய தொழில்நுட்பக் கழகம், மிசோரம்
தேசிய தொழில்நுட்பக் கழகம் மிசோரம் இந்திய அரசின் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 31 தேசியத் தொழில்நுட்பக் கழகங்களில் ஒன்றாகும். இது வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் தலைநகரான அய்சால் நகரத்தில் அமைந்துள்ளது. இது 2010ம் ஆண்டில் நிறுவப்பட்டது. 13 அக்டோபர் 2012 அன்று மிசோரம் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் கட்டிட வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த தேசியத் தொழில் நுட்பக் கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை தொழில் நுட்பப் பட்டப் படிப்புகளும், ஆய்வுப் படிப்புகளும் கொண்டது. இத்தொழில் நுட்பக் கழகத்தில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
Read article